அம்பேத்கர் பிறந்தநாள் விழா: சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவருடைய சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2017-04-14 22:30 GMT

கிருஷ்ணகிரி,

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் சுகவனம் கலந்து கொண்டு அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ரவிசங்கர், துரைசாமி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள்

கிருஷ்ணகிரி அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் வெங்கடாஜலம், முன்னாள் கவுன்சிலர்கள் சோபன்பாபு, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், அர்ச்சுணன், மாதேஸ்வரன், குரு ரவி, கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் கோவேந்தன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் தியாகு, துரைகுட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் லலித்ஆண்டனி, மாவட்ட பொதுச்செயலாளர் பழனிகுமார், நிர்வாகிகள் ஜெயபாண்டியன், கமல்கண்ணன், பாலு, அருண், ரகு, சுகுமார், வேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் துக்காராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திராவிடமணி, மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் லூயிசுராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல ஊத்தங்கரை 4 ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. (புரட்சிதலைவி அம்மா) சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், ஒன்றிய விவசாயி அணி செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்