புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

Update: 2017-04-14 22:45 GMT

விருதுநகர்,

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று புனித வெள்ளியையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அதிகாலை முதல் இரவு 8 மணி வரை நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவையை முத்தம் செய்யும் வழிபாடு மற்றும் சிறப்பு திருப்பலி மறையுரை நடைபெற்றது.

விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் விருதுநகர் மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான ஞானப்பிரகாசம் அடிகளார், துணை பங்குத்தந்தை தாமஸ் வெனிஸ் அடிகளார் ஆகியோர் தலைமையில் புனிதவெள்ளி சிறப்பு வழிபாடுகள் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன்நகர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசெல்வம் அடிகளார், மைக்கேல் அடிகளார், பிரிட்டோ அடிகளார், அந்தோணிராஜ் அடிகளார் தலைமையிலும், ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பெனடிக்ட் பர்ணபாஸ் அடிகளார் தலைமையிலும் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள், திருப்பலி மற்றும் மறையுரையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்