கோடைக்காலத்தில் பரவும் நோய்களை தடுக்க குடிநீரை காயச்சி குடிக்க வேண்டும் கலெக்டர் மலர்விழி அறிவுரை
கோடைக்காலத்தில் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைக்காலமாகும். இதில் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடுமையாக இருக்கும். இந்த கோடைக்காலத்தில் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்களை வராமல் தடுக்க குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடிவைப்பதன் மூலமும், மூடியில்லாத பாத்திரங்கள், தொட்டிகளை துணி கொண்டு மூடி வைப்பதன் மூலமும் கொசு புழுக்கள் உற்பத்தியாகமல் தடுக்க முடியும். இதேபோல் தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து காயவைத்து, பின்னர் அதில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.
தேவையற்ற பொருட்கள்வீடுகளைச் சுற்றி கிடக்கும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், உபயோகப்படுத்தாத டயர்கள், ஆட்டு உரல், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல் மூலம் கொசு உற்பத்தியாவது தடுக்கப்பட்டு டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.
கைகழுவும் பழக்கம்கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்க, போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். வெப்பம் அதிகம் உள்ள நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய அம்மை, கண்நோய் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்க தன்சுத்தம் பராமரிப்பதுடன், கைகழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் வயிற்றுப்போக்கு, அம்மை மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மின்னணு கருவிகள்முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மின்னனு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக டிஜித்தான் மேளாவின் 100–வது நாள் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி, வியாபாரிகளுக்கு மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சுவைப் மிஷின்களை வழங்கினார்.