புதிதாக கட்டிய மதுக்கடை கட்டிடத்தை பொதுமக்கள் இடித்ததால் பரபரப்பு
திருப்போரூர் அருகே புதிதாக கட்டப்பட்ட மதுக்கடை கட்டிடத்தை பொதுமக்கள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர்,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக குடியிருப்பு பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் திருப்போரூரை அடுத்த ஆலத்தூரில் இருந்த மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து சிறுதாவூர் சாலை, ஏரிக்கரை அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிய கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கான கட்டுமான பணியும் நடந்தது. இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக கட்டுமான பணி நடைபெறாமல் இருந்தது.
கட்டிடம் இடிப்பு
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மீண்டும் கட்டுமான பணி நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆலத்தூர் பகுதி பொதுமக்கள் கடப்பாரை, சுத்தியல், இரும்பு கம்பியுடன் அங்கு திரண்டனர். அவர்கள், புதிய மதுக்கடை கட்டிடத்தை இடித்து தள்ளினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சமாதானத்தை ஏற்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிறுதாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
பாதுகாப்பு இல்லை
இந்தப் பகுதியில் புதிய மதுக்கடை திறந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதையில் வாகனம் ஓட்டக் கூடியவர்களால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படும். மேலும் இந்த பகுதியில் ஊராட்சி குடிநீர் கிணறு உள்ளது. அதில் கழிவுகள் கொட்டப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும்.
எங்களுக்கு மதுக்கடை வேண்டாம். இதற்காக நாங்கள் போராட தயாராக உள்ளோம். மதுக்கடையை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.