அரக்கோணம் சரகத்தில் மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

அரக்கோணம் சரகத்தில் மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Update: 2017-04-13 23:15 GMT

அரக்கோணம்,

அரக்கோணம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை அடியோடு தடுத்து நிறுத்தப்படும். அரக்கோணம் சரகத்தில் மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரக்கோணம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசாருடன் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரக்கோணம் நகரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இரவு நேரங்களில் போலீசார் ரோந்து

அரக்கோணம் நகரில் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் இரவு முழுவதும் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அரக்கோணம் சரகத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க 192 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, மானிட்டர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரக்கோணம் நகரத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரியும் நபர்களை பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள் பார்த்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை எனது செல்போன் எண்களில் (9442691658, 9498145347) தொடர்பு கொண்டு சட்ட ஒழுங்கு குறித்து ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனுக்குடன் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்–இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்