மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன்–மனைவி உள்பட 3 பேர் காயம்

தூத்துக்குடி,
தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே நேற்று மாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து ரெயில்வே மேம்பாலம் வழியாக எட்டயபுரம் ரோடு நோக்கி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருக்கு பின்னால் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 2–வது தெருவை சேர்ந்த கணேசன் என்பவர், தனது மனைவி தங்கக்கனி (29)யுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம்.
அப்போது வாலிபர் ஹெல்மெட் அணியாமல் சென்று உள்ளார். இதனால் வாகன தணிக்கையில் இருந்த போலீசை பார்த்தவுடன் திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பி உள்ளார். எதிர்பாராத விதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கணேசன், தங்கக்கனி மற்றும் வாலிபர் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.