தூத்துக்குடி அருகே 16 மீனவர்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி அருகே 16 மீனவர்கள் சிறைபிடிப்பு

Update: 2017-04-02 20:49 GMT
தூத்துக்குடி,


தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த மீனவர்கள், தீவுகளின் அருகே சுருக்குமடியை போன்று பாறையை சுற்றி வலையை போட்டு மீன்களை பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிய மீன்கள் உள்பட பிடிபட்டுவிடுவதாகவும், மீன்வளம் அழிந்து வருவதாக தருவைகுளம் மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

நேற்று தருவைகுளம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது மேட்டுப்பட்டியை சேர்ந்த 16 மீனவர்கள் பாறையை சுற்றி வலையை போட்டு மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்களாம். உடனடியாக தருவைகுளம் மீனவர்கள், மேட்டுப்பட்டி மீனவர்கள் 16 பேரையும், ஒரு படகையும் சிறைபிடித்து தருவைகுளத்துக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து இருதரப்பு மீனவர் சங்க பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மீன்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்