மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாததால் ரூ.250 கோடி சரக்குகள் தேக்கம்

மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாததால் 4 நாட்களில் ரூ.250 கோடி சரக்குகள் தேக்கம்

Update: 2017-04-02 22:45 GMT

திண்டுக்கல்,

தென் இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 30–ந்தேதி முதல் லாரிகள் ஓடவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று 4–வது நாளாக லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் சரக்குகள் தேக்கம் அடைந்தன. இதே போல வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சரக்குகள் கொண்டுவரப்படவில்லை. இதன் எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர தொடங்கி உள்ளன.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக 4 நாட்களில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில் சரக்குகள் தேக்கம் அடைந்து இருக்கின்றன. இதனால் விலைவாசி தொடர்ந்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்