சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்–சேலம் பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்

Update: 2017-04-02 22:15 GMT

ஆத்தூர்,

விருத்தாசலம்–சேலம் பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், ஆத்தூர் ரெயில் நிலையத்தில் கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும், சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சென்னைக்கு பகல்நேர ரெயில் இயக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆத்தூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் சிவக்குமார், அய்யாசாமி, தர்மலிங்கம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். முடிவில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஆத்தூர் ரெயில் நிலைய அலுவலரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்