ராசிபுரத்தில் போலியோ தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ–மாணவிகள் பங்கேற்பு

ராசிபுரத்தில் போலியோ தடுப்பு, புற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு தானம்

Update: 2017-04-02 22:45 GMT

ராசிபுரம்,

ராசிபுரத்தில் போலியோ தடுப்பு, புற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் எஜூகேசனல் சிட்டி சார்பில் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு சங்க தலைவர் நந்தலால் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன், பொருளாளர் ஹரிஹரன், சாசன தலைவர் சங்கர், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராமகிருஷ்ணன், கே.கே.வி.மூர்த்தி, முன்னாள் தலைவர் என்.பி.ராமசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊர்வலத்தை மாவட்ட சேர்மன் (போலியோ தடுப்பு ) அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம், கடைவீதி, அண்ணா சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாசில்தார் அலுவலகம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் 250–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். போலியோவை கண்டறிந்து ஒழித்தல், வழக்கமான தடுப்பு போலியோ சொட்டு மருந்து முறையை ஊக்குவித்தல் உள்பட போலியோ தடுப்பு மற்றும் புற்றுநோய்க்கான காரணங்கள், உடல் உறுப்பு தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசங்களை கோ‌ஷமிட்டவாறு மாணவ–மாணவிகள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். இதில் திட்ட சேர்மன் ராஜூ, ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், மணிவண்ணன், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்