மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

Update: 2017-04-01 22:15 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணா (வயது 33). இவர்களுடைய மகன் சரவணசெல்வன் (11).

அருணா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் காலை அருணா தனது மகன் சரவணசெல்வனுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த சரவணசெல்வனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அதிர்ஷ்டவசமாக சரவணசெல்வன் உயிர்தப்பினார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்