பொன்னேரியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
பொன்னேரியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி பொன்னேரி புதிய பஸ் நிலையத்தின் எதிரே நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடைக்கு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைதகவலறிந்த பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர்.
அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நுகும்பல்காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூரை அடுத்த நுகும்பல் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக திறக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
½ மணி நேரத்திற்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.