மெரட்டூர் கிராமத்தில் முறைகேடாக குடிநீர் திருட்டு; மின்மோட்டார்கள் பறிமுதல்
மெரட்டூர் கிராமத்தில் முறைகேடாக குடிநீர் திருடுவது கண்டறியப்பட்டு மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகளில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை ஒருசிலர் முறைகேடாக மின் மோட்டார்கள் மூலம் திருடுவதாக கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அதிகாரிகள் ஊராட்சிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.
மின்மோட்டார்கள் பறிமுதல்இந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றியம் மெரட்டூர் பகுதியில் மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஊராட்சி அலுவலர்கள் விமலா, தினேஷ், குமார், ஹரி, சந்திரபாபு, ரவி, முருகன் ஆகியோர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது 10–க்கும் மேற்பட்ட வீடுகளில் முறைகேடாக மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருடுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அந்த வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை துண்டித்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.