நெல்லை மாவட்டத்தில் 3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்

நெல்லை மாவட்டத்தில் 3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்

Update: 2017-04-01 22:45 GMT
நெல்லை,


வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாகவும் நீடித்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. பால், தண்ணீர் உள்ளிட்டவை ஏற்றிச் செல்லும் அத்தியாவசிய லாரிகள் வழக்கம்போல் ஓடின.

இதனால் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் குறைந்து காய்கறி மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. அவை லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வெளியூர்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டன. வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் கொண்டு வரப்படவில்லை. இதனால் காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்