தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 5-வது நாளாக முற்றுகை போராட்டம்: விவசாயிகள் பங்கேற்பு
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 5-வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் உடலில் சேற்றை பூசிக்கொண்டு பங்கேற்றனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கடந்த 28-ந் தேதி முதல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாகவும் நீடித்தது.
உடலில் சேற்றை பூசினர்
போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை, தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியேன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இணை செயலாளர் ரவி, காவிரி உரிமை மீட்புக்குழுவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விவசாயிகள் தீந்தமிழன், வினோத், பிரபு ஆகியோர் உடல் முழுவதும் சேற்றை பூசி பங்கேற்றனர். காவிரி மண்ணை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடல் முழுவதும் சேற்றை பூசி பங்கேற்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
தஞ்சையில் தொடர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் விவசாயிகளை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி, டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ஜெ.தீபாவின் கணவர் மாதவன், திரைப்பட இயக்குனர் கண்ணன் ஆகியோரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து அங்கு போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
நல்லக்கண்ணு பேட்டி
பின்னர் நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்ப்பு 27 ஆண்டுகள் போராடி பெற்றோம். ஆனால் இதை மத்திய அரசு அமைக்காமல், தண்ணீரும் வழங்குவதிலலை. காவிரி நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் ஒற்றைத்தீர்ப்பாய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் 27 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமையை இழக்க நேரிடும். எனவே ஒற்றை தீர்ப்பாயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாய சங்கங்கள் நாளை நடத்த உள்ள பொது வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைவிட வேண்டும்
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அதை செயல்படுத்துவதற்கு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்துக்கு எதிரான விரோத போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் 1974-ம் ஆண்டில் காவிரி பிரச்சினை எப்படி இருந்ததோ? அந்த நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். மேலும் மீண்டும் தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்படும். எனவே ஒற்றை தீர்ப்பாயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.