சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி புதுவை மாநிலம் முழுவதும் 168 மதுக்கடைகள் மூடல்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக புதுவை மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 168 மதுக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி கள், சாராயக்கடைகளை ஏலம் விடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பர் 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன.
168 மதுக்கடைகள் மூடப்பட்டன
புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் தான் உள்ளன. மாநில நெடுஞ்சாலைகள் என்ற பிரிவு கிடையாது. புதுவை மாநிலத்தில் மொத்தம் 468 மதுக்கடைகள் உள்ளன.
புதுவையில் கோரிமேட்டில் இருந்து ராஜீவ்காந்தி சிலை வரையிலும், இந்திராகாந்தி சிலையில் இருந்து கன்னியகோவில், மதகடிப்பட்டு வரையிலும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதில் உள்ள 88 மதுக்கடைகள் மூடப்பட்டன. காரைக்காலில் 40 மதுக்கடைகளும், மாகியில் 34 மதுக்கடைகளும், ஏனாமில் 6 கடைகளும் என மொத்தம் 168 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதற்கான உத்தரவை கலால்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
சாராய கடைகளுக்கும் சிக்கல்
இருப்பினும் நேற்று காலை கன்னியகோவில், தவளக்குப்பம் பகுதியில் ஒரு சில மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. இது பற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று அந்த மதுக்கடைகளை உடனடியாக மூடும்படி எச்சரித்தனர். இந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுவை மாநிலத்தில் கள் மற்றும் சாராயக்கடைகள் அதிக அளவு உள்ளன. இவை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நடைமுறைக்கு வந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கள் மற்றும் சாராயக்கடைகளுக்கு வருகிற ஜூன் மாதத்தில் மறு ஏலம் நடத்த முடியாத வகையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்கு பின் மூடல்
இதுகுறித்து கலால்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதையொட்டி அங்கு செயல்பட்டு வரும் சாராயக்கடைகள் ஜூன் மாதத்திற்கு பின்னர் மூடப்பட உள்ளன. புதுவை அரசுக்கு வணிக வரித்துறைக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டிதரும் துறையாக கலால்துறை இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது 168 மதுக்கடைகள் மூடுவதால் 2017-18ம் நிதியாண்டில் அரசுக்கு சுமார் ரூ.80 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஏற்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டு தடை விவகாரம், சுற்றுலா பயணிகள் வருகை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கலால்துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.775 கோடியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுவதன் மூலம் மேலும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.