மேலூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு; 7 பேர் காயம்

மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் நேற்று வடக்கயிறு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2017-04-01 19:49 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் நேற்று வடக்கயிறு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அங்குள்ள மைதானத்தின் மையபகுதியில் ஒரு பெரிய கல் நடப்பட்டு அதில் சுமார் 40 அடி நீளம் உள்ள தடிமனான வடக்கயிறு கட்டப்படும். அந்த கயிற்றின் மறுமுனையில் காளை கட்டப்பட்டு, 9 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். சுமார் 25 நிமிடத்துக்குள் வடக்கயிற்றில் கட்டப்பட்ட காளையை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்க வேண்டும். அவ்வாறு பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுவே வடக்கயிறு மஞ்சுவிரட்டு ஆகும்.

திருவாதவூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்களும் அதிக அளவில் கலந்துகொண்டனர். கொளுத்தும் வெயிலையும், பொருட்படுத்தாமல் போட்டியில் காளைகள் வீரர்களை மிரட்டியும், மிரட்டிய காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தும் மகிழ்ந்தனர். மைதானத்தை சுற்றி வட்ட வடிவில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் ஏராளமான பார்வையாளர்கள் அதில் அமர்ந்து மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியில் 7 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திருவாதவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்