குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட உதவி மையம் தாசில்தார் திறந்து வைத்தார்

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும்

Update: 2017-04-01 22:30 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ–சேவை மையத்தில் பொது வினியோக திட்டத்தின் உதவி மையத்தை (‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு திட்டம்) குடியாத்தம் தாசில்தார் நாகம்மாள் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் காமாட்சி, துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் பலராமன், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் தரணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குடியாத்தம் வட்டத்தில் 115 ரே‌ஷன் கடைகளில், 64 ஆயிரத்து 919 ரே‌ஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரே‌ஷன் அட்டைகளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஆதார் எண் பதிவு செய்த அனைவருக்கும் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. பதிவு செய்தபோது அளித்த செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின்னர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று குறுஞ்செய்தியில் வந்த ரகசிய எண்ணை தெரிவித்து ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.

குறுஞ்செய்தி வந்த 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டை பெற்று கொள்ள வேண்டும். மேலும் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வாங்க செல்லும்போது ஆதார் அட்டையும், ரே‌ஷன் கார்டையும் கொண்டு செல்ல வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்