கோரிக்கை விளக்க பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டம்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை விளக்க பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-01 21:45 GMT

கோவில்பட்டி,

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதியம், பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை விளக்க பேட்ஜ் அணிந்து நேற்று பணியாற்றினர்.

அதன்படி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுவரி, டாக்டர் சங்க மாவட்ட செயலாளர் மோசஸ்பால் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விளக்க பேட்ஜ் அணிந்து பணியாற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் கோரிக்கை விளக்க பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்