கோவா– சென்னை இடையே 20 வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் சேவை கொங்கன் ரெயில்வே அறிவிப்பு

கோவா– சென்னை இடையே 20 வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் சேவைகளை கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு கட்டண ரெயில் கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே ஒருங்கிணைப்புடன் கோவா மாநிலம் மட்காவ்– சென்னை இடைய

Update: 2017-03-31 22:07 GMT

மும்பை,

கோவா– சென்னை இடையே 20 வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் சேவைகளை கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது.

சிறப்பு கட்டண ரெயில்

கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே ஒருங்கிணைப்புடன் கோவா மாநிலம் மட்காவ்– சென்னை இடையே 20 வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்களை கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதன்படி வருகிற 4–ந்தேதி முதல் ஜூன் 6–ந்தேதி வரை (10முறை) வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்06055) சென்னை சென்டிரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு மட்காவை வந்தடையும்.

மறுமா£க்கத்தில் மட்காவில் இருந்து வருகிற 5–ந்தேதி முதல் ஜூன் 7–ந்தேதி வரை (10முறை) வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.35 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.

நின்று செல்லும் இடங்கள்

இந்த சிறப்பு கட்டண ரெயில்கள் இருமார்க்கத்திலும் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கன்னூர், கசாராகாட், மங்களூர் ஜங்‌ஷன், தோக்குர், சூரட்கல், முல்கி, உடுப்பி, குண்டபுரா, மூகாம்பிகா ரோடு பைந்தூர், பாட்கல், முர்டேஸ்வர், கும்பாடா, அன்கோலா, கர்வார் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 9 தூங்கும் வசதிகொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டி, 6 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த தகவல் கொங்கன் ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்