சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் வழக்கு விசாரணை மந்தம்
வக்கீல்கள் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டிய வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
மும்பை,
வக்கீல்கள் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டிய வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
வக்கீல்கள் சட்ட மசோதாபாராளுமன்றத்தில் ‘‘வக்கீல்கள் சட்ட திருத்த மசோதா 2017’’ விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்கள் தங்களுக்கு பாதகமாக உள்ளதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தங்கள் எதிர்ப்பை உணர்த்தும் வகையில் வங்கீல்கள் நேற்று கோர்ட்டு பிறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மராட்டியத்தில் அனைத்து கோர்ட்டுகளிலும் பெரும்பாலான வங்கீல்கள் நேற்று வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை.
முழுமையான வெற்றி...சில வக்கீல்கள் விசாரணையில் கலந்துகொண்டபோதும், கோர்ட்டு நடவடிக்கை மந்தமாகவே இருந்தன. மேலும் வக்கீல் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. குறிப்பாக மேற்கு இந்திய வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான வக்கீல் நேற்று கோர்ட்டு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து மாராட்டிய மற்றும் கோவா பார்கவுன்சில் உறுப்பினர் ஆசிஸ் தேஷ்முக் கூறியதாவது:–
வக்கீல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தை சேர்ந்த பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதேபோல் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டையு, டாமன், மற்றும் தாத்ரா நகர் ஹாவேலி ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. எங்களின் போராட்டம் முழுமையாக வெற்றிபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.