கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-03-31 19:55 GMT

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி செல்வதாக நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் கீழ்வேளூரை அடுத்த ஓர்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூலாங்குடி மெயின்ரோட்டில் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தமாறு போலீசார் கையை காட்டினர்.

110 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபர், மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது அதில் 110 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது. இந்த சாராயம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடி நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்