நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பேட்டி

நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

Update: 2017-03-31 20:30 GMT

பெங்களூரு,

நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

இடைத்தேர்தல்

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை ஆகிய தொகுதிகளில் வருகிற 9–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தங்களின் ஆதரவு இல்லை என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான குமாரசாமி ஏற்கனவே அறிவித்தார். இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நேற்று கூறியதாவது:–

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை

பா.ஜனதாவை சேர்ந்த ஆர்.அசோக், இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தங்கள் கட்சிக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும் என்று பேசியுள்ளார். அவர்கள் பகிரங்கமாக அறிவிக்காவிட்டாலும், அக்கட்சியினர் பாஜனதாவுடன் உள்ளதாக கூறியுள்ளார். ஆர்.அசோக்கின் இந்த கருத்து முற்றிலும் தவறானது.

இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்களின்(ஜனதா தளம்(எஸ்)) ஆதரவு இல்லை என்று நாங்கள் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. அதனால் இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்