சேலத்தில், மளிகை கடையில் இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு பட்டப்பகலில் துணிகரம்
சேலம் அழகாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 62).
சேலம்,
சேலம் அழகாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 62). இவர் தனது வீட்டையொட்டி மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் அவருடைய கடைக்கு 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் கடையில் இருந்த செல்லம்மாளிடம் தண்ணீர் பாக்கெட்டுகள் கேட்டனர்.
இதையடுத்து அவர் தண்ணீர் பாக்கெட்டுகளை எடுக்கும் போது, மர்ம ஆசாமிகள் செல்லம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லம்மாள் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.