வரதய்யபாளையம் அருகே கழுத்தை அறுத்து காவலாளி கொலை போலீஸ் விசாரணை

வரதய்யபாளையம் அருகே கழுத்தை அறுத்து காவலாளி கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-03-31 22:45 GMT

ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த வரதய்யபாளையம் மண்டலம் தலாரிவெட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனீஷ்வரய்யா (வயது 58), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் முனீஷ்வரய்யா தன் விவசாய நிலத்தில் உள்ள வேர்க்கடலை பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் வரதய்யபாளையம் மண்டலம் குரின்ஜலம் ஏரிக்கரை அருகே முனீஷ்வரய்யா கழுத்து அறுக்கப்பட்டும், முதுகில் கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்கிஷோர், சப்–இன்ஸ்பெக்டர் ராம்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனீஷ்வரய்யாவை கொலை செய்ததற்கான காரணம் என்ன?, யார் கொலை செய்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்