சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை அரசுகள் மேல்முறையீடு செய்துள்ளன. அந்த வழக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ‘கடந்த ஜனவரி நான்காம் தேதியன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்‘ என்று உத்தரவிட்டனர்.
சாத்தியமில்லை
இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்றுமுன்தினம் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இங்கு குடிநீருக்கே பஞ்சமாக உள்ளது. அணைகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை. ஆனால் இங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லாத நேரத்தில் எவ்வாறு தண்ணீர் திறந்துவிட முடியும்?.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.