புதுடெல்லியில், அமித்ஷா முன்னிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று பா.ஜனதாவில் சேருகிறார்
புதுடெல்லியில், அமித்ஷா முன்னிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று(புதன்கிழமை) பா.ஜனதாவில் சேருகிறார். காங்கிரசில் இருந்து விலகினார் கர்நாடக முதல்–மந்திரியாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர் எஸ்.எம
பெங்களூரு,
புதுடெல்லியில், அமித்ஷா முன்னிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று(புதன்கிழமை) பா.ஜனதாவில் சேருகிறார்.
காங்கிரசில் இருந்து விலகினார்கர்நாடக முதல்–மந்திரியாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த இவர், கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென விலகினார்.
இது காங்கிரசில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தனது அரசியல் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறி வந்தார். இந்த நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்து, பா.ஜனதாவில் சேருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.
பா.ஜனதாவில் சேருகிறார்இந்த அழைப்பை ஏற்று, 84 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த 15–ந் தேதி பா.ஜனதாவில் சேர முடிவு செய்து இருந்தார். இதற்காக அவர் புதுடெல்லி சென்றார். ஆனால் அவருடைய சகோதரி திடீரென மரணம் அடைந்ததை அடுத்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அவர் பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில் புதுடெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று(புதன்கிழமை) பா.ஜனதாவில் சேருகிறார்.
மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் பிரசாரம்குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.