திருத்துறைப்பூண்டி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்துறைப்பூண்டி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 24-ம் ஆண்டையொட்டி நடந்தது

Update: 2017-03-21 20:41 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 24-ம் ஆண்டையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து ராமர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆய்வாளர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் ராமநாதன், கோவில் தலைமை அர்ச்சகர் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்