ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்டபடி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் கணினி உதவியாளர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒருங்கிணைப் பாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப் படையில் ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவி இயக்குனர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் அளவீட்டிற்கான நுட்ப மதிப்பீட்டை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை நியமித்திட உள்ள தடையினை நீக்கி புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கடந்த 14-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
1,200 பேர் பங்கேற்பு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்பட 1,200 பேர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடிய, விடிய போராட்டம்
நேற்று முன்தினம் இரவிலும் அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. விடிய, விடிய அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக மதியம் வரை இந்த போராட்டம் நீடித்தது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமையிலும், செயலாளர் கை.கோவிந்தராஜன் முன்னிலையிலும் இந்த போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் சென்னையில் நடை பெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றனர்.