தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டம் 517 பேர் கைது
தூத்துக்குடியில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 517 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 517 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரிக்கைகள்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர், ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு காலிப்பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாலைமறியல்
அதன்படி தூத்துக்குடி மாவட்ட சத்துணவு ஊழியர்கள், நேற்று காலை தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பொன்சேகர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினாவதி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் தமிழரசன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
போராட்டத்தில் வணிகவரித்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் வைஜெயந்திமாலா மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கைது
தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் திரண்டு வந்து பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 460 பெண்கள் உள்பட 517 பேரை கைது செய்தனர்.