ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொட
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் ஜெகநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கோரிக்கைகள்பஞ்சாயத்து செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மேலும் சிறப்பாக செயல்படுத்த சட்டத்தில் உள்ளபடி ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.