சம்பள பாக்கி பிரச்சினை: பெஸ்ட் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

சம்பள பாக்கி பிரச்சினை தொடர்பாக பெஸ்ட் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Update: 2017-03-19 22:37 GMT
மும்பை,

சம்பள பாக்கி பிரச்சினை தொடர்பாக பெஸ்ட் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சம்பள பாக்கி

மும்பையில் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரியும் 42 ஆயிரம் ஊழியர்களுக்கு இன்னும் கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ஊழியர்களின் சம்பளம் வருகிற 24-ந்தேதி வழங்கப்படும் என பெஸ்ட் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து இன்று(திங்கட்கிழமை) வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என பெஸ்ட் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

ஆலோசனை

இதையடுத்து பெஸ்ட் கழக பொதுமேலாளர் ஜெகதீஷ் பாட்டீல், மேயர் விஷ்வநாத் மகாதேஸ்வர், ஆணையர் அஜாய் மேத்தா ஆகியோர் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது டிரைவர்கள், நடத்துனர் மற்றும் ஊழியர்களுக்கு நாளையும்(செவ்வாய்க்கிழமை), ஏ, பி, பிரிவு அதிகாரிகளுக்கு நாளை மறுநாளும் சம்பளம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்த முடிவை ஏற்க பெஸ்ட் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இது குறித்து பெஸ்ட் ஊழியர் சங்கத்தை சேர்ந்த சாசங்ராவ் கூறுகையில், ‘இன்று(திங்கட்கிழமை) எங்கள் வங்கி கணக்கில் சம்பளம் வரவில்லையென்றால் வேலை நிறுத்தப்போராட்டம் திட்டவட்டமாக வாபஸ் பெறமாட்டாது’ என்றார். 

மேலும் செய்திகள்