சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

புதுவையில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-03-19 22:21 GMT

புதுச்சேரி,

புதுவையில் வார இறுதி நாட்களில் தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் புதுவை கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, சன்டே மார்க்கெட் உள்ளிட்ட இடங்கள் களை கட்டின. புதுவை அரசு கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் கடற்கரை காந்தி திடலில் வாராந்திர கலைவிழா நடைபெற்றது. இதில் நடனம், இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை கடற்கரைக்கு வந்து இருந்த ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

படகு குழாம்

புதுவையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் சுண்ணாம்பாறு படகு குழாமிலும் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பாரடைஸ் பீச்சுக்கு அவர்கள் படகு சவாரி செய்தனர். அங்கு அவர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.

புதுவையை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று இரவு தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் புதுவை நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்