கோவில்பட்டி,
கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனி சந்திப்பில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அவை தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோழ பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் சந்திர சேகர், பொருளாளர் கண்ணன், தொழிற்சங்க தலைவர் ஜேமுக, கிளை செயலாளர் கணேசன், அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேச ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்து, 120 பேருக்கு இலவச வேட்டிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் மரக்கன்று நட்டினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் இனிப்பு வழங்கினார்.