காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபகழக பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்க தஞ்சை மண்டல பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். மண்டல முன்னாள் செயலாளர்கள் நாராயணசாமிராஜா, குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளருமான இளவரி, மாநில தலைவர் பழனி, மாநில பொருளாளர் ஜெயபால் கண்மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழக அரசு ஊழியர்களைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கும் பணி ஓய்வின் போது கடைசியாக பெறும் மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். தஞ்சை மண்டலத்தில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அமுதம் சில்லறை அங்காடிகளை நுகர்பொருள் வாணிபகழகம் ஏற்று நடத்தி வந்ததைப்போன்று மீண்டும் அமுதம் சில்லறை அங்காடிகளை ஏற்று நடத்த வேண்டும்.
பணி நிரந்தரம்
நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களுக்கு ரூ.20 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.19 ஆயிரமும், காவலர்களுக்கு ரூ.18 ஆயிரமும் ஊதியம் வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் அதிக நாட்கள் இருப்பு இருப்பதால் ஏற்படும் இழப்பிற்கு இழப்பு அனுமதி வழங்க வேண்டும். நவீன அரிசி ஆலை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கணினி இயக்குபவர்களை பணிவரன்முறை செய்து அடிப்படை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மண்டல துணைத்தலைவர் மதிவாணன், அலுவலக செயலாளர் சிவானந்தம், அமைப்பு செயலாளர் பழனிவேல், இணை செயலாளர்கள் சரண்யா, ரேவதி, சேகர், இளங்கோவன், தமிழரசன், சற்குணம் மற்றும் மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல பொருளாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.