ஊரப்பாக்கத்தில் லாரி– கார் மோதல்; சிறுவன் பலி

லாரி– கார் மோதல்; சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

Update: 2017-03-19 22:00 GMT

வண்டலூர

காட்டாங்கொளத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மனைவி ஹேமாவதி மற்றும் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 11) ஆகியோருடன் காரில் நேற்று குரோம்பேட்டை நோக்கி சென்றார். ஊரப்பாக்கத்தில் செல்லும்போது பின்னால் வந்த லாரி, கிருஷ்ணமூர்த்தியின் கார் மீது மோதியது.

இதில் சிறுவன் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த ஹேமாவதி சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்