160 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்

160 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்.

Update: 2017-03-19 22:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளூர் வட்டம் ராமஞ்சேரி, பட்டரைபெரும்புதூர், ரங்காபுரம், கீழ்விளாகம், களியனூர், கைவண்டூர், பாண்டூர், சேத்துப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த 160 பேருக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, பூந்தமல்லி எம்.எல்.ஏ. டி.ஏ.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு 160 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்