பெற்றோர்களுக்கு பாத பூஜை நிகழ்ச்சி

பெற்றோர்களுக்கு பாத பூஜை நிகழ்ச்சி

Update: 2017-03-19 22:30 GMT
தென்காசி,

குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் மற்றும் சாரதா ஆசிரமம் சார்பில் குழந்தைகள், தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. பெற்றோரை நாற்காலியில் அமர வைத்து, குழந்தைகள் தரையில் அமர்ந்து பெற்றோரின் பாதங்களுக்கு பூஜை செய்தனர்.

குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாகவும், தேசத்தின் பாரம்பரியத்தை வளர்க்கும் விதமாகவும் இந்த பூஜை நடத்தப்பட்டது. இதில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெற்றோர்களும், அவர்களது குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு இலஞ்சி நிலக்கிழார் துரை தம்புராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் வர்த்தக சங்க தலைவர் அழகுராஜா, தொழிலதிபர் பிரதாப் ராஜா, செங்கோட்டை லிங்கராஜா, தென்காசி குமார், சங்கரன், ராஜாமணி, நாச்சியப்பன், பா.ஜ.க. நகர தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் கழக செயலாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்