விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் துப்புரவு தொழிலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை,
தீர்ப்புகள்
மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பாக வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு புதூரில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சகாய பிலோமின் ராஜ் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
ஒரே ஊதியம்பணியின் போது விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, நிரந்தரம் மற்றும் தினக்கூலிகள் என பாகுபாடின்றி அவர்களுக்கு சமமான சம்பளம் வழங்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் 141–ன் படி தினக்கூலிகள், ஒப்பந்த தொழிலாளர்கள், தொகுப்பூதியம் பெறுவோர், தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவோர் ஆகிய அனைவரும் ஒரு நிரந்தர பணியாளருக்கு இணையாக சமவேலைக்கு ஒரே ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டும் ஒரு வழக்கில் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி இந்த சட்டத்தை மத்திய–மாநில அரசுகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த சட்டத்தை டெல்லி அரசு முழுமையாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. எனவே டெல்லி அரசை பாராட்டுகிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.