சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 22–ந்தேதி நடக்கிறது

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

Update: 2017-03-19 22:15 GMT

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22–ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களும் தங்களது கோ£ரிக்கைகளை விண்ணப்பமாக எழுதி நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கவுள்ள முன்னாள் படைவீரர்கள் அன்றைய தினம் 11 மணிக்குள் தங்களது விண்ணப்பத்தை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு முன்னாள் படைவீரர் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்