புதுச்சேரி சட்டசபை 30-ந் தேதி கூடுகிறது, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரி சட்டசபை வருகிற 30-ந்தேதி கூடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2017-03-18 23:00 GMT
புதுச்சேரி

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாத இறுதி வரை நடக்கும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த நடைமுறை மாறி வருகிறது.

அதாவது மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் அடுத்து ஒரு சில மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு (இடைக்கால பட்ஜெட்) செய்யப்பட்டு அதற்கு சட்டசபையில் அனுமதி பெறப்பட்டு வருகிறது.

சட்டசபை கூடுகிறது

இந்தநிலையில் புதுவை சட்டசபை வருகிற 30-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், புதுவை சட்டசபை வருகிற 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்