‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திராவிடர் கழக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பிரசார பயணம்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் மோட்டார் சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

Update: 2017-03-18 21:30 GMT
தாம்பரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒருமித்து நிறைவேற்றிய சட்டத்துக்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கி ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் சென்னையில் இருந்து விருத்தாசலம் வரை மோட்டார் சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் பிரசார பயணத்தை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்ச் என்னாரெசு, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மோட்டார் சைக்கிள் பிரசார பயணத்தில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் 10 வாகனங்களில் 20 பேர் செல்கின்றனர். இவர்களின் பிரசார பயணத்தை 21–ந் தேதி விருத்தாசலத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முடித்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் செய்திகள்