விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தரகம்பட்டி,
தரகம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் அவினாசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மாவட்ட அமைப்பாளர் மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் குமனன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேரறிவாளன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் இயக்குனர் சிபிசந்தர், மாநில செயலாளர் வீரசெங்கோலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடவூர் ஒன்றியத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் கல் குவாரிகளை மூடுவது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.