காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த தொழிலாளி கைது

கும்பகோணம்,
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடம்பன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது35). தொழிலாளி. இவர் கும்பகோணத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை கடந்த 2004-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி முருகானந்தத்திடம் கூறினார். ஆனால் அவர், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததோடு, கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் முருகானந்தம் மீது பாதிக்கப்பட்ட அந்த பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.