போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றத்தினர் மனு

பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றத்தினர் மனு

Update: 2017-03-18 22:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் பணி மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இணையதளம் மூலமாக சிலர் அவரது தொண்டு நிறுவனம் பற்றியும், சமுதாய பணிகள் குறித்தும் வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதனால் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தொண்டு நிறுவனம், நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தவறான வதந்திகளை பரப்பியவர்களின் இணையதள முகவரிகளை முடக்கி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்