ஆர்.கே.நகர் தொகுதியில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆர்.கே.நகர் தொகுதியில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லையில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நெல்லை,
ஆர்.கே.நகர் தொகுதியில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் சான்றிதழை வழங்குவார். அவர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை விளக்கி பிரசாரம் செய்வார்கள்.
மத்திய அரசு, தமிழக அரசை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான நிதிகயை ஒதுக்குவது இல்லை. மேலும் மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு வாங்கும் அளவுக்கு திராவிட கட்சிகளுக்கு வலுவில்லை. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அறிவுரைகளை அரசு பின்பற்ற வேண்டும்.
பண பட்டுவாடாவை தடுக்க வேண்டும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பலம் உள்ளவர்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா செய்ய சில அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அவர்களை கண்டு பிடித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் திருமலை குமாரசாமி தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் ராமச்சந்திரன், இசக்கிமுத்து, துணை தலைவர்கள் பிச்சையா பாண்டியன், குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் நமது கட்சி கொடி பறக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் நாம் ஆட்சி அமைக்க முடியும். 50 ஆண்டுகள் ஆட்சி நடத்திய திராவிட கட்சிகளால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை. பா.ம.க. ஆட்சி அமைந்தால்தான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படும். அதற்கு கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்“ என்றார்.
கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் நிஷார் அலி, மாநகர் மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார்.
தூத்துக்குடி
முன்னதாக தூத்துக்குடிக்கு வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க முடியும். தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். விவசாயிகளின் நிலை குறித்து தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசின் செயல்பாடு பூஜ்ஜியமாக உள்ளது“ என்று கூறினார்.