கரூரில் இருந்து பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரியில் மணல் கடத்தல்; டிரைவர் கைது

கரூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் தர்மபுரி வழியாக மணல் கடத்தி வருவதாக

Update: 2017-03-18 22:45 GMT

காரிமங்கலம்

கரூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் தர்மபுரி வழியாக மணல் கடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காரிமங்கலம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி தலைமையிலான போலீசார் நேற்று காரிமங்கலத்தில் கெரகோடஅள்ளி பிரிவு ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் ஓசூர் நெடுசாலை பகுதியை சேர்ந்த பொன்னுராஜ் (வயது25) என்பதும், லாரி உரிமையாளர் அதேபகுதியை சேர்ந்த வேடியப்பன் என்பதும் தெரியவந்தது. கரூரில் இருந்து பெங்களூருவுக்கு 6 யூனிட் மணல் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் பொன்னுராசை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்