குடியாத்தத்தில் சந்தனகுட ஊர்வலம்
குடியாத்தம் தரணம்பேட்டை நீலிகொல்லை தெருவில் உள்ள சையத் அஹ்மத் கபீர் கமிட்டி சார்பில் 35–ம் ஆண்டு சந்தன குட ஊர்வலம் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் தரணம்பேட்டை நீலிகொல்லை தெருவில் உள்ள சையத் அஹ்மத் கபீர் கமிட்டி சார்பில் 35–ம் ஆண்டு சந்தன குட ஊர்வலம் நடந்தது. நினைவிடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளில் சென்று தர்காவில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பைரோஸ், அப்சர், சுலைமான், அன்சர், ஜிலான், சலீம், பாபுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.