சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. இதற்கு பெண்கள் ஆலோசனை குழு தலைவர் பொற்செல்வி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் வேம்பு, வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாரா வரவேற்றார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்னஸ்மேரி கலந்து கொண்டு கூறுகையில், அறிமுகம் இல்லாதவர்களிடம் பெண்கள் தங்களுடைய செல்போன் நம்பர்களை கொடுக்கக்கூடாது, மேலும் பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, சந்தேகபடும்படி யாரேனும் வீட்டுக்கு வந்தால், அவர்கள் குறித்த தகவல்களை போலீசுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ளவர்களிடம் உதவிக்கு அழைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏட்டு ராணி நன்றி கூறினார்.