திருத்தங்கல் பட்டாசு விபத்து மேலும் 3 பேர் சாவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 31).
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 31). இவரது வீட்டில் கடந்த 14–ந் தேதியன்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நாதன்(30) என்பவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு இரண்டு தினங்களுக்கு பிறகு அய்யப்பன்(62) என்பவர் உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை முத்துப்பாண்டி(19), ஜெயபால் (33), மாரியப்பன் (58) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.